×

வழிப்பறியில் ஈடுபட்ட ‘திவான்’ மீது குண்டாஸ்

சிவகங்கை, மார்ச் 13: சிவகங்கையில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட மூன்று பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். சிவகங்கை காமராஜர் காலனியை செர்ந்தவர் ஆகாஷ்(25). இவரும் சிவகங்கை கொட்டகுடியை சேர்ந்த திவான்(35) என்பவரும் கடந்த ஜனவரியில் சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த முருகன்(35) என்பவரை கத்தியை காட்டி மிரட்டி தங்கச்சங்கிலி, செல்போன் மற்றும் பணம் ஆகியவற்றை பறித்து சென்றனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த சிவகங்கை டவுன் போலீசார் இருவரையும் கைது செய்தனர். சிவகங்கை அருகே அழுபிள்ளைதாங்கி கிராமத்தை சேர்ந்தவர் அசோக்(எ)முத்துப்பாண்டி(21). இவர் கடந்த ஜனவரியில் சிவகங்கை மதுரை முக்கு பகுதியில் ஒருவரை கத்தியை காட்டி மிரட்டி ரூ.5 ஆயிரத்தை பறித்து சென்றுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் இவரையும் சிவகங்கை டவுன் போலீசார் கைது செய்தனர். இவர்கள் மூன்று பேர் மீதும் ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் மூவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய எஸ்பி ரோகித்நாதன், கலெக்டர் ஜெயகாந்தனுக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து மூவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.

Tags : Diwan ,
× RELATED விடுதலை ராஜேந்திரன், செ.திவான் உட்பட 8...